Thursday, 12, Sep, 2:18 AM

 

கிண்ணியாவிலிருந்து சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தராக முதன் முதல் நியமனம் பெற்றவர் மர்ஹூம் ஏ.எம்.ஜூனைதீன் அவர்களாவர். இவர் அப்துல் மஜீது – றோகானியும்மா தம்பதிகளின் புதல்வராக 1947.03.12 இல் சின்னக் கிண்ணியாவில் பிறந்தார். 
கிண்ணியா அல் அக்ஸாக் கல்லூரியில் ஆரம்பக் கல்வி கற்ற இவர் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து மூதூர் மத்திய கல்லூரியில் ளுளுஊ வரை கற்றார்.
 
இலங்கை போக்குவரத்துச்சபை கந்தளாய்  டிப்போவில் பாதுகாப்பு உத்தியோகத்தராகப் பணியாற்றியுள்ளார். அதேபோல மட்டக்களப்பு. மற்றும் தம்பலகமம் பிரதேச செயலகங்களின் பாதுகாவலராகவும் பணியாற்றியுள்ளார்.
 
1982 இல் சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தராக நியமனம் பெற்றார். இதன் மூலம் கிண்ணியாவின் முதல் சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் என்ற பெருமையை இவர் பெற்றார்.
 
திருகோணமலை, அநுராதபுரம், கண்டி, மட்டக்களப்பு,  ஆகிய சிறைச்சாலைகளில் பணிபுரிந்த இவர் 2002.03.11 இல் ஓய்வு பெற்றார். 
 
எல்லோருடனும் அன்பாகப் பழகிய இவர் சுறுசுறுப்பான நடத்தை மிக்கவராக இருந்தார். தன்னோடு பணிபுரிந்த இளம் உத்தியோகத்தர்களுக்கு தேவையான வழிகாட்டல்களை அவ்வப்போது வழங்கியுள்ளார்.
 
கதீஜாபீவி இவரது வாழ்க்கைத்துணைவி. நாமிஸ், அனீஸ், முஜீப், நஸ்ரின், சில்மியா, சனீனா ஆகியோர் இவரது பிள்ளைகள்.
 
2013.07.09இல் இவர் காலமானார். இவரது ஜனாஸா மாஞ்சேலைச்சேனை பொதுமையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
 
இவரது மறுமை வாழ்வுக்காகப் பிரார்த்திப்போம்.

தேடல்:


ஏ.ஸீ.எம்.முஸ்இல்

Comment


 

Like us on Facebook (2)

 

Our Branding Partners