துல்லியம் பேசுகின்ற பேனாக்கள்
காகிதங்களில் கட்டுப்படக் கூடாது.
கட்டுப்படுத்துகின்றவன்
கத்திக் குத்துக்கு ஆளாகினாலும்
ஆச்சரியக்குறிப்பு போடத் தேவையில்லை.
அராஜகத்தின் துயர்பின்னலை
அட்டவணைப்படுத்துகையில் சமுதாயத்தின்
ஆணிவேர் அநியாயமாய் சிதைக்கப் பட்டிருப்பது
இரண்டு முண்டைக் கண்களுக்குமான
இன்றைய இரவு காட்சிகள்.
பதுங்கி ஒளிப்பவனெல்லாம்
பரிதாபம் பேசுகின்ற நிலையில்
நீ பதுங்கும் இடத்திலும் உனக்கான
முகாரி மூட்டப்பட்டிருக்கலாம்.
முடிவு செய்து முன்னோக்கி வா.
முடிவிலியாய் நீள்கின்ற வன்மங்களை
வலுவிழக்கச் செய்வோம்.
-நஸார் இஜாஸ் -
Comment