
Dr PM Arshath Ahamed MBBS MD PAED
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிறந்ததை விரும்புகிறார்கள். அவர்கள் தங்களை விட மேம்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். சந்தோஷமானவர்களாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். இதில் எந்த தவறும் இல்லை.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிறந்ததை விரும்புவதால், அவர்கள் பெரும்பாலும் தங்கள் குழந்தைகளின் மகிழ்ச்சியிலேயே அதிக கவனம் செலுத்துகிறார்கள். அதற்காக குழந்தைகள் கேட்பதை வாங்கி கொடுக்கிறார்கள். குழந்தைகள் விரும்புவதை செய்கிறார்கள். இது தான் தவறு. இதன் மூலம் அவர்கள் மகிழ்ச்சியை அடைய முடியாது.
ஏனென்றால் மகிழ்ச்சியானது இவ்வாறான வளர்ப்பு மூலம் உருவாக மாட்டாது. அதற்கு மாறான விளைவுகளேயே கொண்டு வரும்.
உண்மையான மகிழ்ச்சி குழந்தைகள் எவ்வளவு தூரம் நெகிழ்ச்சியானவர்களாக, கஷ்டத்தை தாங்குபவர்களாக அதிலிருந்து மீண்டு வருபவர்களாக ( Resilience) வளர்க்கப்படுகிறார்கள் என்பதிலேயே தங்கி இருக்கிறது. அதிலே தான் உண்மையான மகிழ்ச்சி வெளிப்படுகிறது.
அவ்வாறு வளர்க்கப்படும் குழந்தைகள் தான் பிற் காலத்தில் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்பது ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
கஷ்டங்களை தாங்கி அதிலிருந்து மீள் எழுந்து நிற்கும் திறன், குழந்தைகளுக்கு கடினமான உணர்ச்சிகளையும், மன அழுத்த சூழ்நிலைகளையும் இலகுவாக கட்டுப்படுத்த உதவுகிறது.
இது குழந்தைகளிடம் சிறு வயதிலிருந்தே ஊட்டப்பட வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் இந்தப் பண்பை வளர்க்க உதவ வேண்டும். இது தான் உண்மையான மகிழ்ச்சியை அவர்கள் வாழ்க்கையில் ஏற்படுத்தும். மாறாக சந்தோஷமான குழந்தைகள் விரும்பியதை செய்யவிடும் வாழ்க்கை அல்ல.
ஆகவே பெற்றோர்களே !
குழந்தைகளின் மகிழ்ச்சியில் கவனம் செலுத்த வேண்டாம், அதற்கு பதிலாக அவர்களிடம் கஷ்டத்தை தாங்கி மீண்டுவரும் நெகிழ்ச்சியை உருவாக்க உதவுங்கள். இதுவே நிலையான வெற்றிக்கு முக்கியம். அதுவே அவர்களின் வாழ்க்கையின் பின்னடைவுகளை, தவிர்க்க முடியாத சவால்களை சிறப்பாகச் சமாளிக்க உதவும்.
நிலையான மகிழ்ச்சியானது , கஷ்டங்களை தாங்கும் நெகிழ்ச்சியிலிருந்தே வெளிப்படுகிறது.
Comment