Thursday, 28, Sep, 1:57 PM

 

க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சிறப்பு சித்தி எய்தி பல்கலைக்கழகத்திற்கு தெரிவான அனைத்து மாணவர்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
உங்கள் வாழ்க்கையின் ஒரு முக்கியமான மைல்கல்லை அடைவதற்கு, நிலவும் தொற்று நிலைமையை தடையாகக் கருதாத உங்கள் அனைவரதும் தைரியத்தை நான் பாராட்டுகின்றேன்.
அத்துடன் உயர்தரப் பரீட்சையில் சித்தி எய்திய போதிலும் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பை இழந்த மற்றும் உயர்தரப் பரீட்சையில் சித்திபெறாத மாணவர்கள் இந்த பெறுபேற்றை எண்ணி பின்னடையாது தங்களது எதிர்கால நோக்கங்களுக்காக இந்த பெறுபேற்றை பலமாகக் கொண்டு செயற்படுவார்கள் என்று நம்புகின்றேன்.
புள்ளிகளில் பின்தங்கிய மாணவர்களை ஊக்கப்படுத்துவதாக கருதி சித்தி எய்திய மாணவர்களின் வெற்றியை மட்டம் தட்டாதீர்கள்.
பரீட்சையின் தோல்விகள் அனைத்தும் வாழ்வின் தோல்விகள் அல்ல, தோல்வி என்பது வெற்றியின் படிக்கல். எல்லோரும் முன்னேற தட்டிக் கொடுக்கப்போம்.
நீங்கள் சித்தியடைய தவறியதால் வாழ்கை முடியவில்லை இப்போதுதான் ஆரம்பம் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
Normal Results என்ற மனப்பான்மையுடன் இருந்து விடாதீர்கள். பல்வேறு துறைகள், வழிகள், துறை சார் நிபுணர்கள், கல்விமான்கள், வாய்ப்புக்கள் உண்டு.
உயர்தர,சாதாரண தர பரீட்சைக்குப் பின், வெளிநாட்டுத் தொழில் தேவைகளுக்காக கல்வித் தகமை,தொழில் தகைமை பெற்றுக் கொள்ளும் பொருட்டு கவர்ச்சியானதும் இலகுவானதுமான கல்விக் கூடங்கள் தேர்வு செய்யப்படுகின்றன.
அவை உள்நாட்டு,வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளில் 100% உத்தரவாதமற்றவை.அரச நிறுவனங்களில் ஒரு துறையை தேர்வு செய்து தொழில் நிபுணர்களாவோம், கல்வியூடான சமூக நலனை உறுதிப்படுத்துவோம்.
The Open University of Sri Lanka- www.ou.ac.lk
College of Technology- www.dtet.gov.lk
University Colleges – www. uca.ac.lk
National Vocational Training Institute- www.vtasl.gov.lk
National Institute of Business Management (NIBM)www.nibm.lk
National Institute of Fisheries & Nautical Engineering (Ocean University) -www.gic.gov.lk
Technology Center- www.nitc.gov.np
Institute of Policy Studies- www.ips.lk
Institute of Bankers of Sri Lanka- www.ibsl.lk
Institute Of Engineers Sri Lanka (IESL) - www.iesl.lk
Institute of Management of Sri Lanka- www.imsl.lk
International Training Institute of Irrigation and Water Management- www.kitiiwm.gov.lk
Sri Lanka Institute of Tourism & Hotel Management- www.slithm.edu.lk
Sri Lanka Institute of Advanced Technological Education- www.sliate.ac.lk
Sri Lanka Institute of Information Technology (SLIIT) - www.sliit.lk
Sri Lanka Institute of Marketing (SLIM) - www.slim.lk
Sri Lanka Institute of Textile and Apparel- www.textile-clothing.lk
Sri Lanka Press Institute- www.slpi.lk
Sri Lanka Media Training Institute- www.slmti.lk
Sri Lanka Institute of Bankers- www.ibsl.lk
Sri Lanka Institute of Training and Development- www.slitad.org.lk
Sri Lanka Foundation- www.slf.lk
Sri Lanka Institute of Architects- www.slia.lk
Sri Lanka School of Agriculture- schoolofagriculturelabuduwagalle.blogspot.com
Sri Lanka Irrigation Training Institute- www.irrigation.gov.lk
மாணவர்களே சிறந்த ஆலோசனை வழிகாட்டலுடன் வாழ்க்கையில் சாதிக்க இறைவன் துணையுடன் தயாராகுங்கள்.
நன்றி: அங்கசன் ராமநாதன்

Comment


 

Like us on Facebook (2)

 

Our Branding Partners