Wednesday, 22, Sep, 11:00 AM

 

சனிக்கிழமையன்று (ஜூன் 19) சுகாதார நெறிமுறைகள் மற்றும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை கடைபிடிக்கத் தவறியதற்காக மேலும் 1,082 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக காவல்துறை ஊடக செய்தித் தொடர்பாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

பொது இடங்களில் முகக்கவசம் அணியத் தவறியமை, சமூக இடைவெளியை பராமரிக்காதது மற்றும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியதற்காக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் சட்ட வர்த்தமானி அறிவிப்பு 2020 அக்டோபர் 15 ஆம் தேதி வெளியிடப்பட்டது, இருப்பினும், 2020 அக்டோபர் 30 ஆம் தேதி முதல் தனிமைப்படுத்தல் வர்த்தமானி தொடர்பான சட்டத்தை காவல்துறையினர் செயல்படுத்தி வருகின்றனர்.

இதன்மூலம், கடந்த அக்டோபரிலிருந்து தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுவது தொடர்பாக இதுவரை 40,674 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Comment


மேலும் செய்திகள்

 

Like us on Facebook (2)

 

Our Branding Partners