Friday, 17, Sep, 10:30 AM

 

கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, வலம்புரி சங்கு, கஜமுத்து மற்றும் யானைத் தந்தங்களால் செதுக்கப்பட்ட சிற்பங்கள் மீட்கப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்தனர்.

குருநாகல் விசேட அதிரடிப் படை முகாமைச் சேர்ந்தவர்க​ளே இப்பொருள்களை  ரிதிகமவில் வைத்து கைப்பற்றியுள்ளனர். அப்பொருள்களை வைத்திருந்தார் என்றக் குற்றச்சாட்டில் அ​தே பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதானவர் கைது செய்யப்பட்டார்.

இரண்டு வலம்புரி சங்குகள், கஜமுத்து மற்றும் யானை தந்தங்களால் செதுக்கப்பட்ட இரண்டு சிற்பங்கள் ஆகியனவே கைப்பற்றப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகக் தெரிவித்த ரிதிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

Comment


மேலும் செய்திகள்

 

Like us on Facebook (2)

 

Our Branding Partners