திருகோணமலை-கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கச்சகொடித்தீவு பிரதேசத்தில் சூட்சமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தாக கூறி நுகர்வோர் அதிகார சபையினால் தடுத்துவைக்கப்பட்டிருந்த சீனி 50 கிலோ கிராம் நிறையுடைய 120 மூடைகள் இன்று (10) மீண்டும் உரிமையாளருக்கு விடுவிக்கப்பட்டது.
குறித்த சீனி மூடைகள் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணையில் அவை களஞ்சியப்படுத்தப்பட்டது சட்டபூர்வமாகவே என தெரியவந்ததால் அவற்றை இன்று உரிமையாளருக்கு மீண்டும் விடுவித்ததாக நுகர்வோர் அதிகாரசபை திருகோணமலை மாவட்ட பொறுப்பதிகாரி கிண்ணியா நெட் இற்கு தெரிவித்தார்.
Comment