Friday, 17, Sep, 9:27 AM

 

திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் வன்னி ஹோப் அவுஸ்ரேலியா நிறுவனத்தின் ஒருங்கிணைப்பில் காந்தி இல்லம் நியுசிலாந்து நிதியத்தினால் கோவிட் பரவல் காரணமாக வறுமானத்தினை இழந்த குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் அடங்கிய தொகுதிகள் இரண்டாம் கட்டமாக நேற்று மன்றத்தின் தலைவர் எம். ரீ. எம்.பாரிசினால் வழங்கி வைக்கப்பட்டது.

திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச செயலக எல்லலைக்குட்பட்ட கிராமங்களான கண்ணியா கிளிக்குஞ்சுமலை மற்றும் சீனக்குடா பிரதேசத்தில் உள்ள நெடுங்குடா கிராமங்களில் உள்ள 165 வறிய குடும்பங்களுக்கு அத்தியாவசிய உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

கோவிட் அசாாரண சூழல் காரணமாக
பயணக்கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுவரும் நிலையில் நாளாந்த கூலித் தொழில் செய்யும் வருமானத்தை இழந்த குடும்பங்களுக்கே வன்னி ஹோப் அவுஸ்ரேலிய நிறுவனத்தின் அவசரகால நிவாரண உதவித் திட்டத்தின் கீழ் திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் இந்த நிவாரண பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

Comment


மேலும் செய்திகள்

 

Like us on Facebook (2)

 

Our Branding Partners