திருகோணமலை, கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் படகு பாதை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சிறுவர்கள் உட்பட அறுவர் மரணமடைந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர் என பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றுக்காலை பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற தருணத்தில் அந்த படகு பாதையில் 20 பேர் பயணித்துள்ளனர். அதில், சிலர் நீந்தி கரையைச் சேர்ந்துள்ளனர் என்றும் அறியமுடிகின்றது.
பழைய பாலத்துக்குப் பதிலாக புதிய பாலம் நிர்மாணிக்கப்படுவதனால், கிண்ணியா- குருஞ்சான்குளம் ஆகியவற்றுக்கு இடையில் இந்த படகுபாதை சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
குறிஞ்சாக்கேணி படகு பாதை விபத்துக்குள்ளானதில் காணாமற் போயிருந்த 17 பேர் தற்போதைக்கு காப்பாற்றப்பட்டுள்ளனர்.
அவ்வாறு காப்பாற்றப்பட்டவர்களில் பாடசாலை மாணர்வர்கள் மூவர் அடங்குகின்றனர் என கடற்படை அறிவித்துள்ளது.
காணாமற்போன ஏனையோரை மீட்டெடுக்கும் பணிகளில், கடற்படையின் சிறப்புப் படயணி, உடனடி செயல்பாட்டுப் படையணி, கடற் படையணி உள்ளிட்ட சில சிறப்பு அணிகளும், சுழியோடிகளைச் சேர்ந்த எட்டு குழுக்களும் களமிறக்கப்பட்டுள்ளன என கடற்படை ஊடக அதிகாரி தெரிவித்துள்ளார்.
Comment