
கடந்த 23.11.2021 அன்று கிண்ணியா குறிஞ்சாக்கேணி இழுவைப்படகு அனர்த்தத்தில் இறந்தவர்களுக்காகவும் காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்ப வேண்டும் என்றும் வேண்டி துவா பிரார்த்தனை நிகழ்வு இன்றைய துக்க தினத்தின் நிகழ்வுகளில் ஒன்றாக கிண்ணியா நகரசபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சுகாதார வழிமுறைகளை பேணி கிண்ணியா உலமா சபை கிண்ணியா ஷூரா சபை கிண்ணியா அனைத்து பள்ளிவாயல்கள் சம்மேளனம் கிண்ணியா அனர்த்த நிதியம் என்பவற்றின் குறிக்கப்பட்ட பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.
இந்த நிகழ்வின் முடிவில் குறித்த அனர்த்தத்தின் முழுமையான காரணத்தை கண்டறிவதற்கும் இதனோடு தொடர்புபட்ட பல விடயங்களையும் உள்ளடக்கியதான மகஜர் கிண்ணியா பிரதேச செயலாளர் அனஸ் அவர்களிடமும் கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பெர்னாண்டோ அவர்களிடமும் கையளிக்கப்பட்டது.

Comment