திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கந்தளாய் குளத்தின் வான் கதவுகள் நான்கு திறந்து விடப்பட்டுள்ளன.
வான் கதவுகள் நான்கும் இன்று (10) ஒரு அடிக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளன.
கந்தளாய் குளத்தின் மேலதிக நீரை வெளியேற்றுவதற்காக இவ்வாறு திறந்து வைக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் நீர்ப்பாசன பொறியியலாளர் தெரிவித்தார்.
கந்தளாய் குளத்தின் நீரினைப்பயன்படுத்தி 16 ஆயிரத்து 750 ஹெக்டேயர் நிலப்பரப்பில் வேளாண்மை செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கரையோரத்தில் வசிப்போர் அவதானமாக இருக்குமாறு கந்தளாய் நீர்ப்பாசன பொறியியலாளர் அறிவித்துள்ளார்.
இம்மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற மழை காரணமாக கந்தளாய் குளத்தின் நீர் மட்டம் உயர்வடைந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Comment