Wednesday, 22, Sep, 10:54 AM

 

#1 - இன்று (12) இரவு 11 மணிமுதல் நாளை (13) அதிகாலை 4 மணிவரையில் நாடளாவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. (அது அத்தியாவசிய சேவைகளுக்கு பொருந்தாது)
#2 - 13ஆம் திகதி இரவு 11மணிமுதல் 17ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணிவரை மூன்று நாட்களுக்கு நாடளாவிய ரீதியில், வீட்டை விட்டு வெளியேற முடியாத வண்ணம் பயணத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. (அத்தியாவசிய சேவை, தேவைகளுக்கும், கொரோனா வைரஸ் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள செல்​வோருக்கும் அந்த தடை பொருந்தாது.)
#3 - எதிர்வரும் 31ம் திகதி வரை அத்தியாவசிய தேவைகளற்றோர் தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் இறுதி இலக்கத்தை அடிப்​படையாகக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறலாம்.
அ​வற்றின் இறுதி இலக்கமாக 1,3,5,7,9 ஆகியன இருந்தால், ஒற்றை எண்களைக் கொண்ட நாள்களில் வீட்டை விட்டு வெளியேறலாம்.
0,2,4,6,8 ஆகிய இலக்கங்கள் இருந்தால், இரட்டை எண்களைக் கொண்ட நாள்களில் வீடுகளிலிருந்து வெளியேறலாம்.
இது, பயணங்கள் முழுமையாக தடைவிதிக்கப்பட்டிருக்கும் 13 -17 திகதிகளுக்கு முழுமையாக பொருந்தாது.
👉 திருமண நிகழ்வுகளை நடத்த முடியாது. பதிவுத் திருமணம் செய்வதாக இருந்தால் பதிவாளர், சாட்சியாளர்கள் உட்பட 15 பேர் மட்டுமே பங்கேற்கமுடியும். வெளியாட்களை அழைக்க முடியாது.
👉கொவிட் - 19 அல்லாத மரணங்கள் இடம்பெற்றால் இறுதிக்கிரியைகள் 24 மணிநேரத்துக்குள் நடைபெறவேண்டும். 15 பேர் மட்டுமே பங்கேற்க முடியும்.
👉பொதுப்போக்குவரத்து சேவையில் ஆசன எண்ணிக்கைகளுக்கு அமைவாக பயணிகளுக்கு அனுமதி.
👉 வாடகை வாகனங்களில் சாரதியுடன் இரண்டு பேர் மாத்திரமே பயணிக்க முடியும்.
👉அமைச்சின் செயலாளரின் சுற்றுநிரூபத்திற்கு அமைவாகவே அரச நிறுவனங்களில் செயற்பாடு.
👉 தனியார் நிறுவனங்களில் குறைந்தபட்ச ஊழியர்கள் மற்றும் வீட்டிலிருந்து கடமையாற்றும் வசதிகளுடன் பணிகளை முன்னெடுக்கலாம்.
👉அவசியக் கூட்டங்கள் 10 பேருடன் மட்டுப்படுத்தப்பட வேண்டும். செயலமர்வுகள், மாநாடுகளுக்கு அனுமதியில்லை.
👉 சில்லறைக் கடைகள், பல்பொருள் அங்காடிகள், கடைத் தொகுதிகள், சந்தைகள், பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் வங்கிகளின் இட வசதியில் 25 வீதமானோருக்கே அனுமதி.
👉பேக்கரி, வீதியோரக் கடைகள், அழகுசாதன நிலையங்களில் இட வசதியின் பிரகாரம் 25 வீதமானோருக்கே உட்பிரவேச அனுமதி.
👉 பராமரிப்பு நிலையங்கள், பாலர் வகுப்புகள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் வகுப்புகள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.
👉வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள், இரட்டைப் பிரஜாவுரிமையுடையோர், வெளிநாட்டவர்கள், இராஜதந்திரிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டியது கட்டாயம்.
👉ஒற்றை இலக்கம் உடைய நாளாக இருந்தால் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கம் 1,3,5,7,9 என இருப்பவர்கள் வெளியே வரலாம். நாளை 13 ஆம் திகதி மேற்படி நபர்கள் வெளியே வரமுடியும்.
👉இரட்டை இலக்கம் உடைய நாளாக இருந்தால் 2,4,6,8 ஆகிய இலக்கமுடையவர்கள் வரமுடியும். இறுதி இலக்கம் 0 ஆக இருந்தால் அது இரட்டை நாளுக்குரிய இலக்கமாக கருதப்படும்.
👉எனவே, வெளியே வருபவர்கள் அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு, சாரதி அனுமதி பத்திரத்தை கைவசம் வைத்திருக்க வேண்டும். தேசிய அடையாள அட்டை இல்லாதபட்சத்திலேயே கடவுச்சீட்டு, சாரதி அனுமதி பத்திரங்களை பயன்படுத்த முடியும்.
👉அத்தியாவசிய சேவையை முன்னெடுப்பவர்கள், தொழிலுக்கு செல்லும் அரச மற்றும் தனியார் துறையினருக்கு இந்நடைமுறை பொருந்தாது. பொருட்கள் கொள்வனவு உட்பட இதர விடயங்களுக்காக வருபவர்களுக்கே பொருந்தும்.
👉அதேவேளை, கர்ப்பிணி பெண்கள், இருதய நோயாளிகள் உட்பட அத்தியாவசிய தேவை நிமித்தம் வைத்தியசாலைகளுக்கு செல்பவர்களுக்கும் இந்நடைமுறை பொருந்தாது.

Comment


மேலும் செய்திகள்

 

Like us on Facebook (2)

 

Our Branding Partners