பலாங்கொடை பகுதியில் இருந்து ஒரு ரெட்ரீவர் ரக நாயை திருடி, 7500 ரூபாய்க்கு அடகு வைத்ததாக இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்கள் பலாங்கொடை கிரிமெதித்தென்னவில் வசிப்பவர்கள் என்றும் நேற்று (07) கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நாயை திருடி மற்றும் பணத்திற்கு ஈடாக மற்றொரு நபரிடம் ஒப்படைத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள் பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
(nw)
Comment