வவுனியாவில் நகைக்கடை ஒன்றில் பணிபுரிந்த இந்தியர் ஒருவர் கட்டிடத்தின் மேல் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குறித்த நபர் கடந்த 27 ஆம் திகதி இரவு கட்டிடமொன்றின் மேல் மாடியில் இருந்து குதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
36 வயதுடைய இந்தியர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அந்த நபர் கட்டிடத்தின் மேல் மாடியில் இருந்து குதித்தமை சிசிடிவி கெமராக்களில் பதிவாகியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(adaderana)
Comment