தலிபான்கள் நாட்டின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிய கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்குப் பிறகுதங்கள் புதிய இடைக்கால அரசாங்கத்தை வழிநடத்த முல்லா முகமது ஹசன் அகுந்த் ஐ பெயரிட்டுள்ளனர்.
முல்லா அகுந்த் ஐநா சபையின் தடைசெய்யப்பட்ட நபர் பட்டியலில் இருப்பவர் மற்றும் தலிபானின் சக்திவாய்ந்த முடிவெடுக்கும் அமைப்பான ரெஹ்பரி ஷுரா எனும் தலைமைத்துவ கவுன்சிலின் நீண்டகால தலைவர் ஆவார்.
1996-2001 வரை தலிபான்கள் கடைசியாக ஆட்சியில் இருந்தபோது அவர் முன்பு வெளியுறவு அமைச்சராக இருந்தார், பின்னர் துணை பிரதமராக இருந்தார்.
செவ்வாய்க்கிழமை காபூலில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், தலிபானின் இணை நிறுவனர் அப்துல் கனி பரதர் முல்லா அகுந்தின் துணைவராக இருப்பார் என்று தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறினார்.
அல்ஜசீரா
Comment