Monday, 27, Mar, 10:12 AM

 

பாலூட்டும் அன்னையர் கொரோனா தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதினால் எந்தப் பிரச்சினையும் இல்லை என கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையின் விஷேட வைத்தியர் ஆனந்த விஜயவிக்ரம தெரிவித்தார்.

தடுப்பூசியை பெற்றுக் கொண்ட பின்னரும் குறித்த தாய்மார்கள் வழமைபோல் குழந்தைகளுக்கு பால் ஊட்ட முடியும் என்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ  ஆய்வுகள் கல்விப் பிரிவின் பேராசிரியர் நீலிகா மலவ்கேயும் கலந்து கொண்டார்.

இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட நான்கு வகையான கோரோனா தடுப்பூசிகளிளும், பால் ஊட்டும்  தாய்மார்களுக்கு எவ்வித பாதகமான விளைவுகளும் இல்லை என்று பேராசிரியர் நீலிகா மலவ்கே தெரிவித்தார்.

இதேவேளை, விட்டமின் சி அல்லது டி எடுத்துக்கொள்வது கொரோனா வைரசுக்கெதிராக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்காது என்றும் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம மேலும் தெரிவித்தார்.

Comment


 

Like us on Facebook (2)

 

Our Branding Partners