Wednesday, 22, Sep, 10:35 AM

 

திருகோணமலை மாவட்டத்தில் 19 பேர் கோவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளதாகவும், 1883 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டி.ஜீ.எம்.கொஸ்தா தெரிவித்தார்.

திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தினால் இன்று (09) 10:00 மணியளவில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் நேற்று (08)சனிக்கிழமை காலை 10 மணி முதல் இன்று ஞாயிற்றுக்கிழமை 10 மணி வரை
52 கோவிட் -19 தொற்றாளர்கள் இனங் காணப்பட்டுள்ளதாகவும், மே மாதம் முதலாம் திகதி தொடக்கம் 9 ஆம் திகதி வரை 442 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மொத்தமாக 1883 பேருக்கு கோவிட்-19 தொற்று காணப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை குட்பட்ட பகுதியை மற்றும் உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதிக மரணங்களும், அதிகளவிலான தொற்றாளர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

அத்துடன் தொடர்ச்சியாக திருகோணமலை மாவட்டத்தில் பிசிஆர் பரிசோதனை மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தொடர்ந்தும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறும் அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அப்துல்சலாம் யாசீம்

Comment


மேலும் செய்திகள்

 

Like us on Facebook (2)

 

Our Branding Partners