Monday, 17, Jan, 6:07 AM

 

நாட்டில் கண்டறியப்பட்ட இந்திய திரிபு வைரசு (B.1.617) மற்றும் ஏனைய கொரோனா வைரசு தொற்றாளர்களை தேடி கண்டுபிடிப்பதற்காக புலனாய்வு பிரிவினால் விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்ட்டிருப்தாக மருந்து தயாரிப்பு விநியோகம் மற்றும் ஒழுங்குறுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்

அநுராதபுரத்தில் ஊடகவியலாளர்கள் மத்தியில் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இதுதொடர்பாக தெரிவிக்கையில், இலங்கையில் தற்போது பரவியிருக்கும் கொவிட் 19 வைரசில் முக்கியமாக B.1.1.7 என்ற பிரிடனில் பரவிவரும் திரிபு வைரசு ஆகும்.

ஆனால் தற்போது முதல் முறையாக இலங்கையில் இந்தியாவில் பரவிவரும் திரிபு வைரசு முதல் முறையாக அடையாளங்காணப்பட்டிருப்பதாக தகவல் எமக்கு கிடைத்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதற்கும் இந்த வைரசு இவர்களில் இருந்து மேலும் பரவாமல் இருப்பதற்கான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம். பிரிட்டன் திரிபு வைரசு ஜனவரி மாதம் பதிவானது. இது சமூகத்தில் பரவாதிருப்பதற்கான அனைத்து சடவடிக்கைகளையும் மேற்கொண்டோம்.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் பொரலஸ்கமவில் வேலைத்தளமொன்றில் மீண்டும் பிரிட்டன் வைரசு தொடர்பான தகவல் பதிவானது. அதே இடத்தில் இதனை தடுப்பதற்கு எம்மால் முடிந்தது. ஆனால் இந்த பிரிட்டன் திரிபு வைரசு சமூகத்தில் வேறுவகையில் பரவியதை நாம் அறிவோம்.

தற்போது இந்த இந்திய புதிய திரிபு வைரசு பரவுவதைதடுப்பதற்கு சுகாதார பிரிவு மற்றும் பாதுகாப்பு பிரிவும் ஒன்றிணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன என்றும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன மேலும் தெரிவித்துள்ளார்

Comment


மேலும் செய்திகள்

 

Like us on Facebook (2)

 

Our Branding Partners