ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் கைதிகள் விடுதலை செய்யப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க குறிப்பிட்டார்.
அதற்கமைய, மஹர சிறைச்சாலையில் 20 கைதிகளும் கேகாலை சிறைச்சாலையில் 18 கைதிகளும் வெலிக்கடை சிறைச்சாலையில் 17 கைதிகளும் களுத்துறை சிறைச்சாலையில் 13 கைதிகளும் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
போகாம்பறை மற்றும் மட்டக்களப்பு சிறைச்சாலைகளிலிருந்து தலா 11 கைதிகளும் வாரியபொல சிறைச்சாலையிலிருந்து 10 கைதிகளும் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டனர்.
இதனிடையே, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வதற்கான எவ்வித கட்டளைகளும் தமக்கு கிடைக்கவில்லை என சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
Comment