வன்னி ஹோப் அவுஸ்ரேலியா நிறுவனத்தின் நிதி அனுசரணையில் திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் எழுபத்தி நான்காவது சுதத்தின நிகழ்வு நேற்று திருமலை, இக்பால்நகர் முகம்மதியா வித்தியாலயத்தில் பாடசாலையின் முதல்வர் எம். ஏ. சலாகுதீன் தலமையில் இடம்பெற்றது.
பாதுகாப்பான தேசம்- செழிப்பான நாடு எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற தேசிய சுகதந்திர தின நிகழ்வில் அதீதிகளினால் தேசிய கொடி, மாகாணக் கொடி மற்றும் பாடசாலைக் கொடிகள் ஏற்றிவைக்கப்ட்டதுடன் பாடசாலை மாணவர்களினால் தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. அத்தோடு தேசிய தினத்தினை நிணைவுகூறும் வகையில் பாடசாலை வளாகத்தில் மரங்கள் நடப்பட்டதோடு பதினைந்து விசேட தேவையுடையவர்கள் கௌரவிக்கப்பட்டு அவர்களுக்கு பரிசுப்பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக நிலாவெளிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாாி ஏ.பி. அணில் ஜயசிங்கவும் சிறப்பு அதிதிகளாக குச்சவெளி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம். ஆர். சுரேஸ், மக்கள் சேவை மன்றத்தின் தலைவர் எம். ரீ. எம். பாாிஸ் ஆகியோா் உட்பட, ஆசிரியர்கள், பாடசாலை பெற்றேரர் அபிவிருத்தி சங்கம், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள், பெற்றோா்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comment