கிண்ணியாவில் இன்று நாள் முழுவதும் துக்க தினம் அனுஷ்டிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 23ஆம் திகதி குறிஞ்சாக்கேணி பாலத்தில் ஏற்பட்ட கோர விபத்தினால் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட சகோதரர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிக்கும் வகையிலும் பல கோரிக்கைகளை முன்வைக்கும் முகமாகவும் இன்று வியாழக்கிழமை துக்க தினம் அனுஷ்டிக்குமாறு கிண்ணியா பள்ளிவாயல்கள் சம்மேளனம், கிண்ணியா உலமா சபை மற்றும் மஜ்லிஸ் அஷ்ஷூரா உள்ளிட்ட சிவில் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.
Comment