திருகோணமலை கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் பகுதியில் இடம்பெற்ற அனர்த்தம் தொடர்பில் நேற்று கைது செய்யப்பட்ட மூவரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மோட்டார் பொருத்தப்பட்ட குறித்த படகின் உரிமையாளர் உட்பட அதனை இயக்கிய இருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மூவரையும் டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறிஞ்சாக்கேணியில் (23) குறித்த இழுமைப்படகு நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 4 சிறுவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்ததுடன் 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் சம்பவம் குறித்து முன்னெடுத்த விசாரணைகளையடுத்து கிண்ணயா பொலிஸாரால் ஒருவரும் திருகோணமலை பொலிஸாரால் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
Comment