பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக சிறையில் அல்லது தடுப்புக்காவலில் உள்ளவர்களின் நீதி நடவடிக்கைகளை கவனிக்க இருக்க 3 பேர் கொண்ட ஆலோசனை குழு நியமிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் நியமிக்கப்பட்டுள்ள ஆலோசனைக் குழுவின் தலைவராக முன்னாள் தலைமை நீதிபதி அசோக டி சில்வா இருப்பார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக தடுப்புக் கட்டளைகளின் கீழ் சிறையில் உள்ளவர்களை விடுவித்தல் அல்லது பிணை வழங்குவது குறித்து ஜனாதிபதிக்கு பகுப்பாய்வு செய்து பரிந்துரைக்கும் பணி இவ் ஆலோசனைக் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
(nw)
Comment