Monday, 17, Jan, 7:43 AM

 

அது சரி கொரோனாக் காலத்தில் வேர்ச்சுவல் வலையமைப்பில் நடக்கின்ற வகுப்புகளுக்கும் என்ன கண்றாவிக் கட்டணம்….இவர்களெல்லாம் மனுஷங்களா..புடுங்கிகள்…..இந்த அனர்த்த காலத்தல் இலவசமாக ஜுமில் மாணவர்களுக்கு கல்வி கொடுக்கலாமே நமது ஆசரியர்கள்…இப்போதும் கறறுக் கொடுப்பதற்கு காசென்றால….இதெல்லாம் நல்லால்ல…..இவர்களெல்லாம் என்ன மனிதர்கள்....
என்று ஸுமில் டியூஷன் கிளாஸ் எடுக்கின்ற ஆசிரியர்களுக்கெதிராக முக நூலில் ஆக்ரோஷமான ஆர்பபாட்டம். அந்த ஆர்ப்பாட்ட போஸ்ட்களுக்கு சூப்பர் பெற்றோல் ஊற்றி விடுகின்ற ஒக்டேய்ன் கொமன்ட் உசுப்பேத்தல்கள்.
என்னிடமே சிலர் நேரடியாக சொல்லியிருக்கின்றார்கள் ”பாருங்களேன் மாஸ்டர் இந்த கொரோனா காலத்திலும் ஸும் கிளாஸ் நடாத்தி அதற்கு மாணவர்களிடமிருந்து சில ஆசிரியர்கள் கட்டணம் அறவிடுகின்றார்கள்” என்று. அதெல்லாம் ஒரு புறமிருக்கட்டும்….ஏன் எப்போது பார்த்தாலும் ஒரு பிரிவினர் ஆசிரியர்களையே டார்கெட் பண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். ஏன் எல்லாருமே ஆசிரியர்களிடத்தில் மட்டுமே இலவசம் என்கின்ற வஸ்துவை எதிர்பார்க்கின்றார்கள்.
ஆனால் இதில் ஆச்சர்யம் என்னவென்றால்…..இன்றும் நமது ஊர்களில் வைத்தியர்களின் பிரைவேட் கிளினிக்குகள் முன்னரை விடவும் பர பரப்பாக இயங்கிக் கொண்டுதானிருக்கின்றன. எங்கே அன்டிஜன் பன்டிஜன் அல்லது பீசிஆர் செய்து விடுவார்களோ என்ற பயத்தில் அரச ஆஸ்பத்திரிக்கு செல்லாமல் சாதாரண தடுமலுக்கும் பெரும்பாலான சனங்கள் இன்று பிரைவேட் கிளினிக்குகளுக்குத்தான் செல்லுகின்றார்கள். கொரோனா காலம் என்பதற்காக எந்த பிரைவேட் கிளினக்கும் அடப்பாவமே என்று இரக்கப்பட்டு ஃப்ரீ ஒஃப் சேர்விஸ் நடாத்துவது கிடையாது. அதே கட்டணம்தான். சில வேளை இன்றைய தேதியில் ஸ்கை ரொக்கட்டிங்கை விட மோசமாக எகிறுகின்ற விலைவாசியோடு ஒப்பிட்டு கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டிருக்கலாம் (இதனை நான் பழையென்று வாதிட வரவில்லை..ஒரு தகவலுக்கு மாத்திரமே).
நமது வைத்திய சமூகத்தின் எந்த பிரைவேட் களினிக்கும் ஆகக் குறைந்தது கால சூழலை கவனத்திற் கொண்டு பாதி விலையில் வைத்தியம் பார்ப்பதாக இது வரை நான் நான் கேள்விப்பட்டதில்லை.
அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்கின்ற பல கடைகளில் கால நேரத்தை பயன்படுத்தி சிலர் கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்று கல்லா கட்டிக் கொண்டிருக்கின்றர். ஹார்ட்வெயர் மற்றும் இதர கடைகள் கூட லொக் டவுன் காலத்திலும் இரண்டடி வரை அல்லது ஒற்றைக் கதவை பின் கதவை திறந்து வைத்துக் கொண்டு “எல்லாவற்றுக்கும் விலை கூடி விட்டது என்ன செய்ய” என்ற ஒரே வார்த்தையோடு புதிய புதிய விலைகளில் பொருட்களை பட்டுவாடா செய்து கொண்டிருக்கின்றர். இதே நிலைதான் மரக்கறி விற்கின்ற கடைகளுக்கும். கொவிட் காலத்தில் மீன்களின் விலைகளை பார்த்தால் இனிமேல் மீன் சாப்பிடுகின்றவர்களெல்லாம் பணக்காரர் பட்டியலில் சேர்ந்து விடுவார்களோ என்ற பயம் வருகின்றது. கொவிட் காலமென்ற காரணத்துக்காக இங்கே எதுவும் மாறி விடவில்லை. யாரும் இலவசமென்ற ஐட்டத்தை தூக்கிக் கொண்டு வரவில்லை.
இலவசம் கூட அவசியம் இல்லை..ஆகக் குறைந்தது பாதிக் கட்டணம் அல்லது நியாயமான விலை..ஆனால் இங்கே எல்லாமே தலைகீழ்…சாதாரண காலத்தை விட கொரோனா காலம்தான் பலருக்கு கொள்ளை லாபம் ஈட்டிக் கொடுப்பதில் பிரதான பங்கு வகித்துக் கொண்டிருக்கின்றது. விலை உயர….கல்லா நிறையும் கணக்காக எல்லாமே இங்கே இப்போதிருக்கின்றது.
கொரோனா காலத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்ற தலைப்பில் ஒரு சாமியார் கூட்டம் தொடர்ந்தும் அநியாத்துக்கு நன் ஸ்டொப்பில் உபன்யாசம் நடாத்திக் கொண்டிருக்க இன்னொரு கூட்டமோ இதனைப் பயன்படுத்தி கல்லா கட்டிக் கொண்டிருக்கின்றது. நாடடில் தற்போதைய நிலை இதுதான். இதெல்லாம் பற்றி நான் விமர்சிக்கவோ ஆக்ரோசப்படவோ வரவில்லை..
இத்தனை இங்கே நடந்து கொண்டிருக்கின்றது சராசரி மாசச் சம்பளம் எடுக்கின்ற ஒரு வாத்தியார் மாத்திரம் இந்தக் காலத்தில் ஸுமில் இரு நூறுக்கோ முன்னூறுக்கோ அல்லது ஐந்நூறுக்கோ கிளாஸ் நடாத்தக் கூடாது. அவன் மட்டும் மாய்ந்த மாய்நது முன்னால் ஒரு ஸ்டான்னடில் செல்லைக் கொளுவி வைத்துக் கொண்டு மாணாக்கருக்கு இலவசமாக கிளாஸ் நடாத்த வேண்டும்….(இது டியூஷன் வகுப்புகளுக்கு மாத்திரமே. பாடசாலை மாணவர்களுக்கு நடாத்துகின்ற ஸும் கிளாஸ் இதற்குள்ளே வராது என்பதனை கவனத்திற் கொள்க)
இங்கே நாம் எந்த வைத்தியரிடமும் எந்த வியாபாரியிடமும் “ஏன்டா வாப்பா இந்த கொரோனா காலத்திலும் காசுக்காக இப்படி பண்ணுறீங்கன்னு கேட்கவோ மாட்டோம்..அந்த தைரியம் இங்கே யாருக்கும் கிடையாது. அது அவசியமுமற்றது.ஆனால் ஆசிரியர்களென்றால் கேட்போம்.அவர்கள்தான் அப்பிராணிகளாச்சே…அவர்கள்தான் நேந்து விடப்பட்ட கோழிகளாச்சே..ஆசிரியர்களா ம்ஹும் அவர்கள் டியுஷன் நடாத்தலாகாது…அதுவும் கொவிட் காலத்தில்ல் அவர்கள் இலவசமகாத்தான் டியூஷன் வகுப்பகள் நடாத்த வேண்டும்..காசுக்காக கிளாஸ் நடாத்தினால் அது மரண தண்டனையால் தண்டிக்கப்படக் கூடிய பெருங் குற்றமென்று கொதித்தெழுவோம். இதென்ன குத்ரத்தும் கூத்துமென்று எனக்கு இன்னும் புரியவில்லை.
இலவசமாக ஜுமில் கற்பிக்கின்றவர்கள் கற்பிக்கட்டும்……நல்ல விஷயம்தானே..அவர்களுக்கு மாஷா அல்லாஹ்க்களையும் வாழ்த்துகளையும் கொங்ராட்ஸ்களையும் குடோஸ்களையும் கொட்டுங்கள்..பூங்கொத்துகளை நீட்டுங்கள்…சமூக அக்கறையுள்ள ஆசிரியர்கள் என்ற தலைப்பில் கவிதை எழுதுங்கள்.சந்தோஷம். அந்த ஆசிரியர்களின் எணணங்களுக்கும் செயல்களுக்கும் நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் கூலி உண்டு.
ஆனால் காசுக்காக கிளாஸ் நடாத்துகின்ற சமூக அக்கறையற்றவர்களென்றும் இவர்களெல்லாம் ஆசிரியர்களா என்றும் மற்றவர்களை விமர்சனம் செய்யாதீர்கள். அந்த உரிமையும் தகுதியும் இங்கே யாருக்கும் கிடையாது. அப்படித்தான் இந்த கொரோனா காலத்தில் இலவசமாக்கதான் ஆசிரியர்கள் வகுப்பு நடாத்த வேண்டும்….என்று வரிந்து கட்டுகின்றவர்கள் பிரைவேட் ஸ்டெதஸ்கொப் பாரட்டிகள் லாபம் மட்டுமே பார்க்கின்ற வியாபாரிகள் என்று நிறையப் பேர் இருக்கின்றார்கள். எல்லாரிடமும் இந்த வேண்டுகோளை முன் வையுங்கள்…அப்புறம் ஆசிரியர்களை கவனித்துக் கொள்ளலாம்.
எப்போது பாரு டியூஷன் வாத்தியார்களையே குறை சொல்லிக் கொண்டு…இதன் பின்னால் ஏதோ ஒரு Victimized Tuition Phobic Mentality இருக்கின்றது என்பது மட்டுமே உண்மை
.
கிண்ணியா சபருள்ளா
2021-08-27

Comment


மேலும் செய்திகள்

 

Like us on Facebook (2)

 

Our Branding Partners