Monday, 17, Jan, 7:43 AM

 

“சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி அவன் சுளுவாக தப்பித்து விட்டான்…சட்டத்தில்தான் போதியளவுக்கு ஏகப்பட்ட ஒட்டைகள் இருக்கின்றதே…அது போதுமே ஒரு குற்றவாளி ரொம்ப ஈஸியாக எஸ்கேப்பாக….சட்டத்தில் எங்கு பார்த்தாலும் ஓட்டைகள்…..அதனால் எங்கும் ஆட்டைகள்…..அப்புறம் எப்படி நீதியை எதிர்பபார்ப்பது…”
போன்ற அலுப்போடும் கொட்டாவியோடும் சில நேரம் பயங்கர ஆவேசத்தோடும் பலரது வாய்களிலிருந்து வருகின்ற மாமூல் வார்த்தைகளை இன்று வரை கேட்டுக் கொண்டுதானிருக்கின்றோம்.
“சட்டத்தில் ஓட்டை சட்டத்தில் ஓட்டை” என்று ஆளாளுக்கு மாறி மாறி அலுப்போடும் சலிப்போடும் திருவாய் மலர்ந்தருளுகின்றார்களே தவிர எங்கே அந்த ஓட்டை அது எப்படியிருக்கும்….தயவு செய்து அதனை கொஞ்சம் காட்டுங்களேன் அடைக்கின்ற வழியை பார்ப்போம் என்றால் ஆளாளுக்கு தெரியாதே என்ற கணக்கில் உதடுகள் பிதுக்குகின்றார்கள். ஓட்டைகள் ஓட்டைகள் என்று சொல்லுகின்றார்களே தவிர அந்த ஒட்டைகளை பெரும்பாலும் அலுப்போடு சொல்லிக் கொள்ளுகின்ற பாரம்பர்ய எக்சைட்டிங் பார்ட்டிகள் தமது வானாளில் கண்ணால் கூட கண்டிருக்க மாட்டார்கள். ஆனால் சாகும் வரைக்கும் சட்டத்தில் ஓட்டை சட்டத்தில் ஓட்டை என்று ஓயாமல் ஒப்பாரி வைத்தழுது கொண்டேயிருப்பார்கள்..
சினன வயதில் பலரின் திருவாய்களிலிருந்து இந்த சட்ட ஓட்டை சமாச்சாரத்தை நானும் கேள்விப்பட்டிருக்கின்றேன். நமது தமிழப்படங்களில் அடிக்கடி பார்ததிருக்கின்றேன். கேள்விப்பட்டதோடு சரி..அது மற்றவர்களைப் போலவே கண்ணுக்கு மறைவான ஒரு ஜெமினமேனாகவே கடைசி வரை இருந்து வந்தது எனக்கும் . ஒரு சடடததரணியாக ஆன பின்னர்தான் இந்த சனங்கள் சட்டத்தில் ஓட்டை என்று குறுக்கெழுத்துப் போட்டியில் அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் எவை என்று பேசிக் கொள்ளுகின்றார்கள் என்று பார்த்தால் அவை யாவுமே சட்டத்தின் அடிப்படைகள் அல்லது பொது விதிகள் என்பதனை புரிந்து கொண்டேன் அதனைத்தான் நமது மகாஜனங்கள் சட்டத்தில் ஓட்டை என்று சராசரி மாமூல் ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
பொதுவில் பாராளுமன்றத்தால் கொண்டு வரப்படுகின்ற எழுத்திலாலான நியதிச்சட்டங்களாக (Statutes) இருக்கலாம் அல்லது காலா காலமாக பின்பற்றப்பட்டு வருகின்ற பொதுச் சட்டமாக (Common Law Principles) இருக்கலாம்..எல்லா சட்டங்களுக்குமென்று ஒரு அடிப்படை இருக்கின்றது. ஆணி பிடுங்குகின்ற சட்டத்திலிருந்து காணி பிடுங்குகின்ற வரை எல்லாவற்றுக்கும் ஒரு அடிப்படை இருக்கின்றது. அந்த அடிப்படையை வைத்துத்தான் அத்தனையுமே சம்பந்தப்பட்ட சப்ஜெக்ட் தொடர்பில் நீதிமன்றங்களால் அளவீடு செய்யப்படும். நினைத்தபடியெல்லாம் தன்னிஷ்டத்துக்கு யாரும் இங்கே சட்டத்தை கொண்டு வந்து நீதி செலுத்துகின்றேன் என்ற ஹீரோயிச அலப்பறையெல்லாம் செய்ய முடியாது. அப்படி செய்ய வெளிக்கிட்டாலே சட்டமும் அதுனூடாக எதிர்பார்க்கப்படுகின்ற பெறுபேறுகளும் சமூக சமநிலையும் கோவிந்தா கோவிந்தாதான்.
குறிப்பாக குற்றவியல் சட்டத்தை பொறுத்தளவில்தான் இந்த ஓட்டைகள் ஓட்டுக்குள்ளேயிருந்து கொண்டு தலையை மெல்ல நீடடி; வெளியே எட்டிப் பார்க்கின்ற ஆமைகளாகத் தெரியும். குற்றமென்று செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுகின்ற ஒருவன் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்து வழக்கு விளக்கத்தின் பின்னர் வடுதலை செய்யப்படுகின்ற போது ரெடிமேடாக மகா சனங்களின் பாரம்பர்ய வாயில் ஒரு வார்த்தை வரும்..”சட்டத்தின் ஒட்டைளை வைத்து பாவிப் பயல் தப்பி விட்டான்” என்று. இது சட்டத்தின் ஓட்டை அல்ல. அது ஒரு ஒழுங்கு…அது ஒரு அடிப்படை. இந்த ஒழுங்கையும் அடிப்படையையும் வைத்துத்தான் நீதி நிர்வாகம் சென்று கொண்டிருக்கின்றது. எல்லாவற்றுக்கும் ஒரு ஒழுங்கும் அடிப்படையும் எப்போதுமே அவசியம். அது உலகளாவிய ரீதியில் ஏற்று அங்கீகரிக்கப்ட்ட விதியாக இருக்கும். அதனைத்தான் சட்டத்தின் அடிப்படையாக கொண்டு வந்திருப்பார்கள்.
எமது அரசியலமைப்பின உறுப்புரரு13(5) ன் படி “எந்த ஒரு நபரும் அவர் குற்றவாளியாகக் காணப்படும்; வரைக்கும் சுற்றவாளி என்று ஊகம் கொள்ளப்பட வேண்டுமென்று (Every person shall be presumed to be innocent until found guilty) ஏற்பாடு செய்கின்றது. இதுதான் குற்றவியல் சட்டத்தின் அடிப்படை. இதற்கு நம்மவர்கள் வைத்திருக்கின்ற பெயர் ஓட்டை. இந்த அடிப்படைக்குப் பின்னாலுள்ள காரணம் அநியாயமாக ஒருவரை கண்டதும் குற்றவாளியாக்கி தண்டித்து விடக்கூடாது என்பதும் குற்றமொன்று இழைத்ததாக சந்தேகப்பட்டு நீதிமன்றத்துக்கு அது தொடர்பில வழக்கு விசாரணைக்கு கொண்டு வரப்படுகின்ற நபர் அந்த வழக்கு விளக்கம் முடியும் வரைக்கும் குற்றம் செய்யாதவர் என்று ஊகம் கொள்ளப்பட வெண்டுமென்ற பேரக்கறையுமாகும்.
அதே போலத்தான் குற்றவியல் வழக்குகளின் பொதுவான அடிப்படைப் பொது விதி ஒரு நபருக்கெதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்து வழக்கு விளக்கம் நடாத்தப்டுகின்ற (Trial) போது அவருக்கெதிராக கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டுகள் (Charges) நியாமான சந்தேகத்துக்கு அப்பால் (Beyond reasonbale doubt) நூறு வீதம் நிரூபிக்கப் பட வேண்டும் என்பதாகும். இது குற்றவியல் சட்டத்தின் ஆதார சுருதி. அடிப்படை. பொது விதி. யாரும் மீற முடியாது. நியாயமான சந்தேகத்துக்கு அப்பால் நிரூபிக்கப்பட வேண்டுமென்கின்ற இந்த குற்றவியல் வழக்குகளின் ஆதாரமான பொது விதிக்கு நம்மவர்கள் வைத்திருக்கின்ற பெயர் “சட்டத்தில் ஓட்டை”.
குற்றவியல் வழக்கென்பது பாரதூரமானதொன்று. ஒரு நபரின் தனிநபர் சுதந்திரத்தை (Personal Liberty) அப்படியே ஆணி பிடுங்குவது போல பிடுங்கி எறிந்த விடுகின்ற பிஸினஸ். முறையாக நடக்கின்ற வழக்கு விளக்கத்தில் குற்றமொன்றுக்கா குற்றம் சாட்டப்பட்ட நபர் குற்றவாளியாக காணப்படுகின்ற போது மரண தண்டனைக்கோ ஆயுள் தண்டனைக்கோ அல்லது ஆண்டுக் கணக்கான கடூழிய சிறைத் தண்டனைக்கோ ஆளாக நேரிடலாம். அப்படிப்பட்ட வழக்குகளில் சட்டம் எப்போதும் கண்ணுக்குள்ளே விளக்கெண்ணெய் விட்ட கணக்காக ரொம்ப ரொம்ப கவனமாகவே இருக்கின்றன. இதன் பின்னாலுள்ள அறம் அப்பாவியான யாரையும் அநியாயமாக தண்டித்து விடக் கூடாதே என்பதுதான்.
பொதுவில் குறற்வியல் வழக்குகளில் வழக்கு விளக்கத்தை நடாத்துகின்ற நீதவான் நீதிமன்றங்களோ மேனீதிமன்றங்களோ அல்லது மேன்முறையீடுகளை விசாரிக்கின்ற மேன் முறையீட்டு மற்றும் உச்ச நீதிமன்றமோ நியாயமான சந்தேகத்துக்கு அப்பால் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட வேண்டுமென்பதில் பயங்கர உஷாராக இருக்கும். நீதிமன்றத்தில் வழக்கு விளக்கத்தின் போது நீதிமன்றத்துக்கு அந்த விளக்கத்தை நடாத்த தேவையான பொருட்கள் நம்பத் தகுந்த சாட்சிகளும் ஏனைய சான்றுகளும்தான் (Reliable and Credibel Witnesses and Other Evidences) . இவற்றை வைத்தே நீதிமன்றங்கள் தன் முன்னே குற்றவாளிக் கூண்டில் இருப்பவன் குற்றவாளியா அல்லது சுற்றவாளியா என்ற முடிவுக்கு வரும்.
குற்றவியல் வழக்குகளில் மட்டுமல்ல குடியியல் வழக்குகளிலும் இதுதான் நிலைமை. குடியியல் வழக்குகளில் நம்பத் தகுந்த சாட்சிகள் மற்றும் ஆவணச் சானறுகள் மிக மிக முக்கியமானவவாயகம். நீதிமன்றத்தின் முன்னால் கொண்டு வரப்படுகின்ற சாட்சிகள் ஏனைய சான்றுகள் ஆவணங்களை அடிப்படையாக வைத்தே நீதிமன்றங்க்ள ஒரு தீர்மானத்துக்கு வரும். குற்றவியல் வழக்குகளில் நியாயமான சந்தேகத்துக்கு அப்பால் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக உள்ள குற்றச் சாட்டுக்ள அரச தரப்பு அல்லது வழக்கத் தொடுனர் தரப்பு நிரூபிப்பதில் கொஞ்சம் சறுக்கினாலும் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர் சார்பாக அநத சந்தேகத்தை பயன்படுத்தி (Benefit of Doubt) குற்றம் சாட்டப்பட்டவரை வழக்கானது நியாயமான சந்தேகத்துக்கு அப்பால் எண்பிக்கப்படவில்லை என்ற காரணத்தை அடிப்படையாக வைத்து விடுதலை செய்த விடும்.
நீதிமன்றத்தின் முன்னாலுள்ள குற்றவியல் வழக்கில் “இவர்தான் இந்தக் குற்றத்தை செய்தாரா என்பதில் இத்தனூன்டு சைஸ் சந்தேகம் வந்தாலும் நீதிமன்றம் குற்றசம் சாட்டப்பட்டவரை நபரை விடுதலை செய்து விடும். இது சட்டத்தின் பொது விதி. ஒரு வேளை குற்றமே செய்திருந்தாலும் கூட நீதிமன்றத்துக்கு அந்த குறற்த்தை நிரூபிக்க போதுமான நம்பத் தகுந்த சாட’சிகள் சான்றுகளை கொண்டு வந்து வழக்கினை நியாயமான சந்தேகத்துக்கு அப்பால் வழக்கத் தொடுனர் தரப்பு நிரூபிக்கத் தவறுகின்ற சந்தர்ப்பத்தில் அந்த குற்றம் சாட்டப்பட்ட நபரை நீதிமன்றம் விடுதலை செய்து விடும். செய்ய வழியில்லை. ஏனெனில் சட்டத்தின் விதிக்குட்பட்டே நீதிமன்றங்கள் தமது தீர்ப்பினை எழுத முடியும்.
சட்டத்துக்கான விதிகள்ள ஏற்கனெவே வரையறுத்து வைக்கப்பட்டிருக்கின்றன. அதற்குள்ளால்தான் நீதிமன்றங்களும் பயணம் செய்ய வேண்டும். ஒருவேளை நியாயமான சந்தேகத்துக்கு அப்பால் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டுகள் எண்பிக்கப்பட வேண்டுமென்ற விதியில்லாமல் சாதாரணமாக சாட்சிகளைக் கொண்டு நிரூபிக்கலாம் என்றிருந்தால் இன்று எத்தனையோ குற்றம் புரியாத அப்பாவிகள் ஜெயிலில் இருவு வேளைகளில் “தேனே தென்பாண்டி மீனே…இசைத்தேனே” மோகனாகியிருப்பார்கள். சந்தேகமே கிடையாது. நியாயமான சந்தேகத்துக்கு அப்பால் குற்ற்சசாட்டுகள் எண்பிக்கப்பட வேண்டுமென்ற அடிப்படை கோட்பாட்டினால்தான் பல அப்பாவிகள் சட்டத்தினால் காப்பாற்றப்பட்டிருக்கின்றார்கள்.
ஆனால் இதற்கு நம்மவர்கள் வைத்திருக்கின்ற யெபர் “சட்டத்தில் ஓட்டை”.. இது ஓட்டை கிடையாது. எல்லாவற்றுக்கும் ஒரு அடிப்படைக் கோட்பாடு அல்லது கருதுகோள் இருக்கின்றது. அதனடிப்படையில்தான் செல்ல முடியும். அடிப்படைகள் இல்லாவிட்டால் ஆளாளுக்கு தன்னிஷ்டத்துக்கு விளையாட ஆரம்பித்து விடுவார்கள். அப்புறம் “மறுபடி அமெரிக்காவுக்கே போய் விடு சிவாஜி” என்று சொல்ல வேண்டிய நிலைமை நம்மெல்லார்க்கும் வந்து விடும். நான் மெலே சொன்ன மாதிரி தாம் செய்த குற்றங்களிலிருந்து பலர் சட்டத்தின் பார்வையிலிருந்து தப்பித்திருக்கலாம். அதற்கு அடிப்படைக் காரணம் அவர்களுக்கெதிரான வழக்கில் நம்பத் தகுந்த சாட்சிகளும் சான்றுகளும் இல்லாமலிருந்திருக்கலாம். அவர்களுக்கெதெிராக உள்ள குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதிய ஆதரங்களில்லாமலிருந்திருக்கலாம்.
அதெல்லாம் தாண்டி அவர்களுக்காக வழக்காடுகின்ற வக்கீல்கள் சட்டத்தை கரைத்து மண்டையில ஊற்றி வைத்திருக்கின்ற டைகர் தயாநிதிகளாக இருந்திருக்கலாம். செய்ய வழியில்லை.
நியாயமான சந்தேகத்துக்கு அப்பால் குற்றச்சாட்டுக்ள எண்பிக்கப்பட வேண்டுமென்ற தேவையில்லை…இவன்னதான் குற்றம் செய்ததான் .இவனைப் புடிச்சி ஜெயில்ல போடுங்க சேர் என்று நாம் உணர்ச்சிவசப்பட்டு கத்துகின்றோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்….இதனால் குறற்மே செய்யாத பல அப்பாவிகளும் உள்ளே போவார்கள் பராவியில்லையா பாஸ்.
ஆதலால் நான் புரிந்து கொண்டதெல்லாம் சட்டத்தின் அடிப்படைகளுக்கும் பொது ஏற்பாடுகளுக்கும் நமது மகா ஜனங்கள் வைத்திருக்கின்ற செல்லப் பெயர் “சட்டத்தில ஓட்டை”. சட்டத்தில் ஓட்டை என்று வெடிக்கின்ற உணர்ச்சிவாசிகளிடம் போய் “எக்ஸ்கியூஸ் மீ சட்டத்தில் ஓட்டை சட்டத்தில் ஓட்டை என்று எதைச் சொல்லுகின்றீர்கள் என்று ஒரேயொரு கேள்வியை கேட்டுப் பாருங்கள்….அவர்கள் பதில் சொன்னால் சீனி விலைக் குறைப்பைக் கோரி நான் உரியானத்தோடு நாடு பூராகவும் ஊர்வலம் வருவேன். இது சத்தியங்குறேன்.
சட்டத்தரணி சபருள்ளா (கிண்ணியா)
2021-08-27

Comment


மேலும் செய்திகள்

 

Like us on Facebook (2)

 

Our Branding Partners